Loading...
தூயத்தமிழில் ஜோதிடத்தின் பெயர் சோதி + திடம் ஸ்ரீ சோதிடம் என்பதாகும். பரம்பொருளான இறைவன் சோதி வடிவத்திலேதான் காட்சி அளிக்கிறான். உலகத்தில் உள்ள எல்லா மதங்களுமே இறைவன் சோதி வடிவானவன் என்றே கூறுகின்றன.
இன்றைக்கு விஞ்ஞானமும் ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறான் என்பதை அவன் உடலில் உள்ள வெப்பத்தை வைத்தே உறுதி செய்கிறது. உலக உயிர்கள் அனைத்துமே அந்த சோதியில் இருந்துதான் வந்தன. மீண்டும் நாம் வந்த இடத்திற்கே போக வேண்டும் என்பதுதான் விஞ்ஞானம். அதை உணர்த்துபவர்கள்தான் மெய்ஞானிகள். அந்த மெய்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த சோதிட சாஸ்திரம். வேறு எந்த சாஸ்திரத்தின் மூலமும் வேறு எந்த தியான யுக்திகளின் மூலமும் பரம்பொருளை அடைவது கடினம். அப்படி அடைய முடியும் என்றால், இன்றைக்கு உலகத்தில் பல லட்சம் ஞானிகளாவது தோன்றியிருப்பார்கள்.
ஆனால் தோன்றவில்லை என்பதை வைத்தே அது யாருக்கும் புரியவில்லை என்பது புலனாகிறது. சோதி எரியும் சோதிட சாஸ்த்திரத்தின் மூலமாக பரம்பொருளை கன நேரத்தில் புரிந்துகொள்ளலாம். ஒரு வினாடியில் புரிந்துகொள்ளலாம். ஆனால், இன்றுவரை சோதிடத்தை தங்களுடைய சுய ஆசைகளுக்காக பயன்படுத்தினார்களே தவிர தாங்கள் எங்கிருந்து வந்தோம் என்ற சுயத்தை அறிய முற்படவில்லை.
சுயத்தை அறிவதற்கு சோதிடக்கலையை பயன்படுத்தவில்லை. காரணம் முட்டாள் கையில் கிடைக்கும் எந்த மேலான விஞ்ஞானமும் பயன்படுத்த தெரியாததால் அது வழிமாறிப் போகும். அப்படி மிகவும் வழிமாறிப் போனதுதான் இன்றைய சோதிடக்கலை.
முட்டாள் கையில் கிடைக்கும் மாணிக்கமும் தன் மகத்துவத்தை இழந்துவிடும் என்பதைப் போல ஜோதிடமும் முட்டாள்களின் கைகளில் இந்த கலியுகத்தில் அகப்பட்டு மிகவும் கேலிக்குறியதாகி புறம் தள்ளப்பட்டுவிட்டது.
அதற்கு காரணம் அதை பொன்னுக்கும், பெண்ணுக்கும் அரசியல் பதவிகளுக்கும் இன்னும் பொருள் சார்ந்த அனைத்து பேராசைகளுக்கும் மனிதன் பயன்படுத்தினான். அதையெல்லாம் இதன் மூலமாக ஓரளவிற்கு தெரிந்துகொள்ள முடியும். ஆனால், அதுவே முடிவல்ல. ஆக, இக்கலை முடிவைப்பற்றி யாரும் எடுத்துரைக்காததால் அப்படி எடுத்துரைக்கும் எந்த புத்திசாலியும் இந்த சோதிடக்கலையில் தோன்றாததால்தான்.
இந்த மாபெரும் விஞ்ஞானம் கடந்த யுகங்களில் மாபெரும் வளர்ச்சிப் பெற்றிருந்த ஒரு மாளிகையாகும். ஆனால் அற்ப விஷயங்களுக்காகவும் நிலையற்ற தன்மைகளை ஆராய்வதிலும் கலியுக ஜோதிடர்கள் ஈடுபட்டதால் இதன் மகத்துவத்தை மனிதனும் உணரமுடியவில்லை. பிறருக்கும் உணர்த்த முடியவில்லை. நீங்கள் உணர்ந்தாலன்றி பிறருக்கு உணர்த்த முடியாது.
இதை ஜோதிட சத்குருஜி மேஹ்ரு அவர்கள் பல பிறவிகளில் உணர்ந்ததால் அதை பிறருக்கு உணர்த்த இந்த ஜென்மத்தில் அவதரித்து உள்ளார். எல்லா மனித இனமும் தாங்கள் எங்கிருந்து வந்தோம் என்பதை மறந்துவிட்டு திரியும் இந்த கலியுகத்திலே தங்களுடைய அருள்வடிவமான சுயவீடு எது? ஏன்பதை காணாமல் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் "தான் பெற்ற இன்பம் பெறட்டும் இவ்வையகம்" என்று உலக மக்கள் ஒவ்வொருவரின் சுய ஜாதகத்தின் மூலமாகவே அவர்களுடைய ஆன்மீக வீட்டை சுட்டிக்காட்டி பிறவி என்னும் பெருங்கடலை கடந்து தங்கள் இறைவீட்டின் கதவுவரை கொண்டுவந்து விடுகிறார் - ஜோதிட சத்குருஜி மேஹ்ரு.
பிறகு, அவர்கள் அந்த இறைவீட்டின் கதவைத்தட்டி உள்ளே செல்ல வேண்டியதுதான்.
பின்குறிப்பு: ஹிந்து மதம் இறைவனை உபநிஷத்துகளிலும், வேதங்களிலும், நூறு கோடி சூரிய சமப்பிரபம் என்று கூறுகிறது. அந்த நூறு கோடி சூரிய சமப்பிரபம் தான் - சோதி + திடம். அதாவது நூறு கோடி சூரிய சமப்பிரபம் ஒளி வீசிக்கொண்டிருக்கும் கலைதான் ஜோதிடக் கலையாகும்.
கிறிஸ்தவ மதம் : இறைவனை "கடவுள் ஒளியானவர" என்று குறிப்பிடுகிறார்கள்.
இஸ்லாமிய மதம் : ரமலான் மாதம் கடைசி நாள் தெரியும் அந்த சந்திர பிறை - ஒளியை வைத்து தான் நோன்பை நிறைவு செய்கின்றனர். நூறு கோடி சூரியனிடமிருந்து ஒளியை வாங்கி ஒளி வீசுகிறது சந்திரன்.
ஆகையால்தான் ஜோதிடத்தை உணந்தவர்; பரம்பொருளை உணர்ந்தவர் ஆவார். ஜோதிடத்தை அறிந்தவர் சகலத்தையும் அறிந்தவராவார்.
அவராலேயே பிறரையும் பிறவா நிலைக்கு இட்டுச் செல்ல முடியும்.
தன்னை தானறிந்து தெளியும் ஒருவரது வாழ்வே இறைமயாகிவிடுகிறது. அப்படி இறைத்தன்மையாகி போன ஒரு மகான் தான் ஜோதிட சத் குருஜி மேஹ்ரு அவர்கள். உங்களையும் அந்த இறை ராஜ்ஜியத்திற்குள் அழைத்துச் செல்ல பிறப்பெடுத்தவராவார் - ‘மேஹ்ரு” அவர்கள்.
-சுபம்-